சிரித்தபடி, 'நீங்க வருவீங்கனு எதிர்பார்த்தேன்' என்றார் கடையில் தம் அறைக்குள் அமர்ந்திருந்த சுந்தர ராமசாமி.
உக்கும். வரணும்னு எதிர்பாத்தேன்னு சொன்னா என்ன குறைஞ்சிடுவீங்களா என்று உள்ளூர சிணுங்கிக்கொண்டான்.
அவனை உட்காரச் சொல்லிவிட்டு, 'ஒரு நிமிஷம்' என்றபடி கடையின் காரியதரிசி காட்டிய கணக்கைப் பார்ப்பதில் மூழ்கிப்போனார்.