என்னய்யா மெஸ் இது. போவும்போது, தகடாட்டம் பட்டையா வருமோனு பயப்படவேண்டிய அளவுக்கு மெல்லிசா தோசை வாக்கறாங்க உங்க ஊர்ல, என்று அறைவாசிகளிடம் அங்கலாய்க்கிற அளவிற்கு ஆகிவிட்டிருந்தான்.
21 June 2023
14 June 2023
ஆபீஸ் அத்தியாயம் 54 சுயநலம்
இரண்டு நாள் முன்பாக கேவிஆரைப் பார்த்ததும் முதல் காரியமாக, "எஸ்விஆருக்கு பணம் கொடுத்துவிட்டீர்கள்தானே" என்றுதான் கேட்டான்.
07 June 2023
உலகச் சிறுகதைகள் 18 பீட்டர் பிஷெல்
ஆனால் அறையில் எல்லாமும் அப்படியேதான் இருந்தன. ஒரு மேஜை, இரண்டு நாற்காலிகள், ஒரு படுக்கை. அவன் உட்கார்ந்தபோது 'டிக்டிக்' ஒலியை மறுபடியும் கேட்டான். அவனுடைய சந்தோஷமெல்லாம் மறைந்து போயிற்று. எதுவும் மாறியிருக்கவில்லை.
ஆபீஸ் அத்தியாயம் 53 மிதப்பு
தம்முடைய இயல்பான கட்டுக்கோப்பை உதறிவிட்டு, அவரையும் அறியாமல் முகத்தில் வெளிப்படையாய் மகிழ்ச்சிப் பொங்க, சற்றே உரக்கப் பேசிக்கொண்டு இருந்தார். அறைக்கு வந்த கமலா மாமியிடம், 'தெரியுமா, இவர் நகுலனைப் பாக்க திருவணந்தபுரம் போகலையாம். கன்யாகுமரியைக் கூட பாக்காம, மெட்ராஸுக்குத் திரும்பிப்போறார்' என்று குதூகலத்துடன் குழந்தைபோலச் சொல்லிக்கொண்டிருந்தார் சுந்தர ராமசாமி.
உலகச் சிறுகதைகள் 17 மரியா லூயிஸா பொம்பால்
“எனக்கு மட்டும் தோழிகள் இருந்திருந்தால்,’’ அவள் பெருமூச்செறிந்தாள். எல்லாருமே அவள்மீது சலிப்படைந்தார்கள். தன்னுடைய முட்டாள்தனத்தைக் கொஞ்சம் குறைத்துக்கொள்ள அவள் முயன்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஆனால், பெரிய இழப்பை எப்படி ஒரே மூச்சில் ஈடுகட்ட முடியும்? புத்திசாலித்தனம் குழந்தைப்பருவத்திலிருந்தே தொடங்கவேண்டும், இல்லையா?
01 June 2023
ஆபீஸ் அத்தியாயம் 52 போதும்
“ஜெனரலா நெறைய ரைட்டர்சுக்கு அப்பாக்களோட ஒத்துப் போகாது. பொதுவா, அப்பாக்கள் நாம்ப நினைக்கறா மாதிரி பிள்ளைகள் இருக்கணும், அதுதான் அவங்களுக்கு நல்லதுனு நினைப்பாங்க. பசங்க - அதுலையும் கொஞ்சம் யோசிக்கற பசங்க, அவங்க எப்படி இருக்கணுங்கறதைப் பத்தி சொந்தமா நெறைய யோசிச்சு வெச்சிருப்பாங்க. அது அப்பாக்களோட நெனப்புக்கு நேர் எதிரா இருக்கும். தமிழ்ல ஆரம்பிச்சு உலக இலக்கியம் வரைக்கும் ஆகாத அப்பா மகன்களுக்கு ஏகப்பட்ட உதாரணங்களைச் சொல்லலாம்” என்று குறுமுறுவலுடன் முடித்தார்.
24 May 2023
ஆபீஸ் அத்தியாயம் 51 வாழ்வும் ஆரம்ப வரிகளும்
சற்று நேரம் கழித்து, 'ராமசாமி, நீங்க ஏன் எழுதறதைப் பத்தி எழுதக்கூடாது. என்னை மாதிரி எத்தனையோ பேருக்கு யூஸ்ஃபுல்லா இருக்குமே' என்றான்.
17 May 2023
உலகச் சிறுகதைகள் 16 இடாலோ கால்வினோ
பரமஹம்ஸர், முல்லா நஸ்ருதீன் குட்டிக்கதைகள் பெரும்பாலும் தனிமனிதர்களைச் சார்ந்தவையாக இருக்கும். அதிலும் முல்லா கதைகளில் சுய எள்ளலும் சேர்ந்துகொள்வதால் பாமரர்களும் ரசிக்கும்படி சுவாரசியமாக இருக்கும். எளிய கதைகளில் அரிய உண்மைகள்.
ஆபீஸ் அத்தியாயம் 50 நிறைவு
சிரித்தபடி, 'நீங்க வருவீங்கனு எதிர்பார்த்தேன்' என்றார் கடையில் தம் அறைக்குள் அமர்ந்திருந்த சுந்தர ராமசாமி.
உக்கும். வரணும்னு எதிர்பாத்தேன்னு சொன்னா என்ன குறைஞ்சிடுவீங்களா என்று உள்ளூர சிணுங்கிக்கொண்டான்.
அவனை உட்காரச் சொல்லிவிட்டு, 'ஒரு நிமிஷம்' என்றபடி கடையின் காரியதரிசி காட்டிய கணக்கைப் பார்ப்பதில் மூழ்கிப்போனார்.
உலகச் சிறுகதைகள் 15 சாதத் ஹசன் மாண்டோ
சிறந்த எழுத்தாளர்கள் அனைவருமே, தமக்கென இருக்கிற தனித்த பார்வையுடன், எவ்வளவு வித்தியாசமாக, எத்தனைக் கடுமையான கருத்தை, நுட்பமான கருப்பொருளைக் கையாண்டாலும் ஆர்பாட்டமின்றி ஒரே மாதிரி, அமைதியாகவே எழுதுகிறார்கள்.
உலகச் சிறுகதைக்ள் 14 இடாலோ கால்வினோ
வாசிப்பு என்ன செய்யும் என்பது, கட்டுரைக்கான பொருள் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லிவிடலாம். அதைக் கதையாக எழுதமுடியுமா?. மிகச்சிறந்த கதையாக எழுதமுடியும் என்பதற்கான எடுத்துக்காட்டாக விளங்குகிறது இந்தக் கதை.
13 May 2023
ஆபீஸ் அத்தியாயம் 49 முடிச்சுகள்
03 May 2023
ஆபீஸ் அத்தியாயம் 48 உயரம்
'ஜே ஜே சில குறிப்புகள் படிச்சிருக்கீங்களா ஜேகே' என்று கேட்டதற்கு, 'ஜவுளிக்கடை எப்படி நல்லா போகுதா' என்று ஜெயகாந்தன் நக்கலாகத் திருப்பிக் கேட்டதிலிருந்து, 'அவங்க கடைல தீபாவளிக்குத் துணி எடுத்திருக்கோம். ஆனா கட ஓனர், இவ்ளோ பெரிய எழுத்தாளர்னு தெரியாது' என்று, ஞாநி வீட்டில் பிரசாதம் தொகுப்பைக் கையில் வைத்துக்கொண்டு சொன்ன அந்தப் பக்கத்துக்காரனான பாலா சிங் வரை, பலர் மூலமாகவும் நாகர்கோவிலில் சுந்தர ராமசாமி ஜவுளிக்கடை வைத்திருப்பவர் என்பது தெரியவந்திருந்தது. கடைப் பெயரைக்கூட கேள்விப்பட்டது போலத்தான் இருந்தது. ஆனால் சரியாகத் தெரியவில்லை. நாகர்கோவிலிலேயே அதுதான் பெரிய ஜவுளிக்கடை என்று சமயவேலோ திலீப்போ யாரோ சொல்லி நினைவில் பதிந்திருந்தது.
26 April 2023
ஆபீஸ் அத்தியாயம் 47 அலைகள்
19 April 2023
ஆபீஸ் அத்தியாயம் 46 அலைதலின் ஆனந்தம்
அதுக்கென்ன போலாமே என்று உற்சாகமாகக் கிளம்பினான். அப்போதுதான் அது எவ்வளவு மோசமன பகுதி என்பதே தெரியவந்தது.