எட்டடிக் குச்சுக்குள்ளே எல்லோரும் பத்தினிகள்
- ஞானரதம் (அக்டோபர் - டிசம்பர் 1983)
தமிழனுடைய தோலின் தடித்தனம் பற்றி, குறைபட்டுக்கொள்ளாத எழுத்தாளர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். சிறுமுனகல் தொடங்கி, விரை ஏறிக்கொள்ளும் அளவிற்கு எல்லோரும், அவரவர் இயல்பிற்கேற்ப சத்தம் போடுகிறார்கள், சிறுபத்திரிகை வளாகத்திற்குள்.