”இந்த தளத்தில் எதையுமே பேசலாம். ஆனால் இது ஓர் எழுத்தாளராகிய என்னுடைய தளமாக அறியப்படுவதனால் சில சிறு சங்கடங்கள் இருக்கின்றன. ஆகவே சில விஷயங்களை பேசவேண்டாமென நினைக்கிரேன். சாரு அதில் ஒரு தலைப்பு. என்னைப்பொறுத்தவரை இனி எப்போதும் எந்நிலையிலும் எங்கும் அந்த பெயரை சொல்லப்போவதில்லை. கருத்துரைக்கவும்போவதில்லை. இதன்பின்னால் ஆழமான ஓர் அவமான உனர்ச்சி இருக்கிரதென்பதை மட்டுமே சொல்ல விரும்புகிறேன். இங்கே பேசப்படும் எதுவும் என்னுடன் அடையாளப்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்பதனால் இந்த எச்சரிக்கை. மற்றபடி எதையும் தடுக்க அல்லது கட்டுப்படுத்த விரும்பவில்லை.”
ஒரு தமிழ் எழுத்தாளர் அடியேனைப் பற்றி எழுதியிருப்பதே மேலே கண்டது.
கொடுத்த காசுக்கு வஞ்சனை இல்லாமல் சிரிப்பு மூட்டும் சிறந்த நகைச்சுவை எழுத்தாளரான விருது ஸ்பெஷலிஸ்ட் திருவாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ஒலக சினிமா புத்தகத்தில் பைசைக்கிள் தீவ்ஸ் படத்தின் முடிவு பற்றி எழுதி இருப்பதை கூகுள் பஸ்ஸில் படிக்க நேர்ந்ததும் வெடித்து சிரித்துவிட்டேன்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் - எம்.டி.எம்மின் இந்தக் கட்டுரை தமிழர்களால் மட்டுமல்லாது தன்னைத் தமிழன் என்று உணரும் ஒவ்வொருவராலும் வாசிக்கப்படவேண்டியதாகும் என்பது இந்தக் கன்னட-மராட்டிய எளிய தமிழனின் வேண்டுகோள்.