கவிஞர் விக்ரமாதித்யனுக்கான இபுக் பிராஜெக்ட்டுக்காக, அவரது கவிதைத் தொகுதிகளைப் பெற்றுக்கொள்ள இன்று கேகே நகர் சென்றிருந்தேன். அலுவலக வேலை இன்று அங்கும் அதைத் தாண்டியும் இருந்தது.
09 November 2017
08 November 2017
தவிப்பு - சிறுகதைத் தொகுதி
1 1/4 வருடத்தில் எழுதிய இந்த ஒன்பது கதைகளும் அச்சில் 64-70 பக்கம் வந்தாலே அதிகம் என்பதால் எந்தப் பதிப்பகமும் வெளியிட முன்வராது என்பது தெள்ளத் தெளிவாகிவிட்டது. குறைந்தது 150 பக்கங்களேனும் இருந்தால்தான் அது புத்தகமாகத் தோற்றமளிக்கும் என்பது, பதிப்பக வட்டாரத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்களின் ஏகோபித்த கருத்தாக இருக்கிறது.
26 October 2017
28 May 2017
07 April 2017
படித்த டாக்டர்களும் படிக்காத மெக்கானிக்கும்
பேலியோ உணவு முறைக்கு வந்து, இருபது நாள் கூட ஆகாமல் திடீரென்று சில தினங்கள் முன்பாக ஒரு நாள் பிபி மாத்திரை எடுப்பதை நிறுத்திவிட்டேன்.
03 April 2017
உடல்நல போதையும் உண்டக்கட்டி போதகர்களும்
நமது நலம்விரும்பி, கான்ஃப்ரென்ஸ் கால் போட்டார் பேலியோ டயட்டீஷியனான அவரது நண்பருக்கு
30 March 2017
28 March 2017
போங்கடாங்...
போதைப் பொருள் கடத்தல் தொடர்பான சில தகவல்களை விசாரிப்பதற்காக, சற்றுமுன் ஆங்கில இந்து பத்திரிகையிலிருந்து நிருபரொருவர் தொடர்புகொண்டார். பேசி முடித்தபின்,
26 March 2017
04 March 2017
உள்ளும் வெளியும்
2005-06ஆக இருக்கலாம். நான், சினிமாட்டோகிராபர் நண்பனான தரன் என்கிற ஶ்ரீதர், 80களில் சென்னை பிலிம் இன்ஸ்டிடியூட்டில் நடிப்பு பயின்ற கிறிஸ்டோபர், டிராட்ஸ்கி மருது என்று தினம் சந்திக்கும் டிரைவ்-இன் ஜமா.
28 February 2017
காசில்லா கோடீஸ்வரன்
குமாஸ்தாக்களாலான 70-80களின் இலக்கிய உலகில், ஒரு வங்கி குமாஸ்தாவுக்கு உரிய ஒழுங்குடனும் விவேகத்துடனும் நான் கவிஞன் எனது தொழில் இலக்கியத்தில் இயங்குதல். இதுவே என் உழைப்பு. என் உணவை சம்பாதிக்கத் தனியாக வேறு ஏன் நான் உழைக்க வேண்டும், மாட்டேன் என்கிற வைராக்கியத்துடன் வாழ்ந்தவர் பிரமிள்.
04 February 2017
17 January 2017
கரையாத நினைவுகள்
இன்று, ஏறக்குறைய ஏழரை மணியளவில் தொடங்கி, புத்தகக் கண்காட்சியின் ஒரு வரிசையைக் கூட விடாது சுற்றி வந்தேன் - நான் எவ்வளவு பிரபலம் என்பதை எனக்கு நானே தெரிந்துகொள்ள. குறைந்தபட்சம் என்னை யாரேனும் அடையாளமாவது தெரிந்துகொள்கிறார்களா அட்லீஸ்ட் யாரோ போல் எங்கோ பார்த்ததுபோல் இருக்கிறதே என்கிற சந்தேகக் குறியேனும் எந்த முகத்திலாவது தெரிகிறதா என எதிர்படும் முகங்களையெல்லாம் துழாவியபடி சென்றுகொண்டிருந்தேன். டைகூட அடிக்க வக்கில்லாத இந்தத் தாடிக்காரப் பயல் நம்மை ஏன் இப்படிப் பார்க்கிறான் என்கிற ஐயத்தைத்தான் காண முடிந்தது. முன்றில் கடையைக் கடந்தபோது, கருப்பி டி சர்ட் அணிந்த இளைஞர் பக்கத்தில் அமர்ந்திருந்த மஞ்சள் டி சர்ட்டிடம் குனிந்தது தெரிந்தது என் பிரமையாகக்கூட இருக்கலாம். எல்லோரும் என் தலை தட்டுப்பட்டதுமே எண்பது தொண்ணூறடி தூரத்திலேயே, என்னைத் தெரியாத பாவனையை மிகுந்த பிரயாசையுடன் தங்கள் முகங்களில் அணிந்து கொள்வதாக பாவித்துக் கொள்வதுதான் எவ்வளவு இதமாக இருக்கிறது.
14 January 2017
அடத் தேவாங்கே
யாரோ பிச்சைக்காரன் திரித்துச் சொன்னதை, துக்ளக்கில் வண்ணநிலவன் எழுதியதாக யாரோ மெய்ல் தட்டினால் அதற்கு, வங்கிப் பெண்மணி வீடியோ போல ஆப் பாயிலாகக் கொதித்து இன்னொரு ’தேவாங்குக் குதி’ குதித்திருக்கிறார் ஜெயமோகன்.
13 January 2017
Subscribe to:
Posts (Atom)